ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பிஜாப்பூர் பகுதியில் நக்சலைட்களுக்கும், பாதுகாப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
மறுபுறம் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 5ஆம் தேதி பஸ்தாருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இவரது வருகைக்கு பின் மீண்டும் நக்சலைட்டுகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அதிகரித்துள்ளனர்.
அந்த வகையில், நேற்று (மார்ச் 27) பிஜப்பூரில் IED குண்டு வெடிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 28) கான்கேரில் மற்றொரு IED குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் விமானம் மூலம் ராய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.