குவாலியர்(மத்தியப் பிரதேசம்): பிஜாலி பகுதியில் வசித்து வருபவர், 28 வயது இளம்பெண். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் இவரது கணவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அப்பெண் தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(மே 16) நள்ளிரவு 2 மணியளவில் அடையாளம் தெரியாத இரு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து இரு குழந்தைகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, குழந்தைகளுக்கு முன்பே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.