இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜெர்மனியிலிருந்து முதல் கட்டமாக ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்துள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அனுப்பிய ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் டெல்லி வந்தடைந்தன! - ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் டெல்லி வந்தடைந்தன
டெல்லி: நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஜெர்மனியிலிருந்து முதல்கட்டமாக ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் வந்தடைந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
Puri
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,'ஜெர்மனியிலிருந்து முதல் கட்டமாக ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் டெல்லிக்கு வந்தடைந்தன. இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் கரோனாவுக்கு எதிராக தங்கள் பங்களிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.