தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

1980 மொரதாபாத் கலவரம்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜக கொடுத்த ட்விஸ்ட்! - 1980 மொராதாபாத் கலவரம்

1980 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மொரதாபாத் கலவரம் குறித்த அறிக்கை 43 ஆண்டுகளுக்கு பிறகு உத்தர பிரதேச சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

1980
1980

By

Published : Aug 8, 2023, 7:41 PM IST

லக்னோ :1980 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மொரதாபாத் கலவரம் குறித்த அறிக்கை 43 ஆண்டுகளுக்கு பிறகு உத்தர பிரதேச சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலத்தின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா சட்டப் பேரவையில் 1980 மொரதாபாத் கலவரம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். 1980 ஆம் ஆண்டு அரங்கேறிய மொரதாபாத் கலவரத்தில் ஏறத்தாழ 83 பேர் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் - நவம்பர் மாதங்களில் உத்தர பிரதேசத்தில் உள்ள மொரதாபாத் நகரில் கலவரம் வெடித்தது. ஈகை திருநாள் தொழுகையின் போது கலவரம் வெடித்த நிலையில், ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா, மொரதாபாத் கலவரம் குறித்து மறைத்து வைக்கப்பட்டு இருந்த அறிக்கையை பாஜக தலைமையிலான அரசு வெளிக் கொணர்ந்து உள்ளதாக கூறினார். மொரதாபாத் கலவரத்தின் உண்மை நிலையை அறிய, மாநில மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் இதற்கு முன் பதவி வகித்த 15 முதலமைச்சர்கள் ஏன் மொரதாபாத் கலவரம் குறித்து சட்டசபையில் முன்வைக்கவில்லை என்றும் கேஷவ் பிரசாத் மவுரியா கேள்வி எழுப்பினார்.

மேலும் உண்மை வெளிவர வேண்டும் என்றும் கலவரத்தைத் தூண்டியது யார்? கலவரக்காரர்களைப் பாதுகாத்தது யார்? இவை அனைத்தும் அறிக்கையில் தெளிவாக உள்ளதாகவும் அவர் கூறினார். 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஈகை திருநாள் தொழுகையின் போது வெடித்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச அரசு நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :இந்துக்களுக்கு எதிரானது பாஜக.. பாஜக அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழப்பு.. பிரதமர் பதவி விலக திருமாவளவன் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details