டெல்லி: க்யூ எஸ் உலக பல்கலைக்கழக தர வரிசையானது, பல்கலைக் கழகத்தின் பல முக்கிய பணிகள், கல்வியாண்டு தேர்ச்சி விகிதம் நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை, அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற செயல்திறன்களை கொண்டு வெளியிடப்படும்.
அந்த வகையில் க்யூ எஸ் ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல், நேற்று (நவம்பர் 8) வெளியிடப்பட்டது. இதில், முதல் 200 பல்கலைக்கழகங்களில் 19 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்கள், முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்றது இதுவே முதல் ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஆண்டு, முதல் 200 க்யூ எஸ் ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில், ஐஐடி பாம்பே 40வது இடத்தையும், ஐஐடி டெல்லி 46வது இடத்தையும், ஐஐஎஸ்சி பெங்களூர் 52, ஐஐடி மெட்ராஸ் 53ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.