ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் பதிலளித்தார். அப்போது அவர், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கம் என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாது இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு 613 பேரை கைது செய்தது.
அதன் பின்னர் களச்சூழல் மேம்படத்தொடங்கியதால் பலர் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 430 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 183 பேர் காவலில் உள்ளனர். அத்துடன் ஜம்மு காஷ்மீர் அரசு யாரையும் வீட்டுக்காவலில் வைக்கவில்லை எனக் கூறினார்.