தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அருணாச்சல பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் மாயம் - குருங் குமே சாலை பணி தொழிலாளர்கள் மாயம்

அருணாச்சல பிரதேசத்தில் சாலை பணியில் ஈடுபட்ட 18 தொழிலாளர்கள் மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

18-labourers-missing-in-arunachal-pradesh-along-the-indo-china-border
18-labourers-missing-in-arunachal-pradesh-along-the-indo-china-border

By

Published : Jul 19, 2022, 12:23 PM IST

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் உள்ள ஃபுராக் ஆற்றின் அருகே உள்ள அமைக்கப்பட்டுவந்த சாலை பணியில் 19 தொழிலாளர்களில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ஜூலை 5ஆம் தேதி முதல் மாயமாகினர். இதனிடையே, தொழிலாளர்களில் ஒருவரது உடல் ஃபுராக் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

இதனால், 19 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து போலீசார் தரப்பில், 19 பேரும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒப்பந்ததாரர், பக்ரீத் விடுமுறை அளிக்கவில்லை என்பதால், அனைவரும் வீட்டிற்கு புறப்பட திட்டமிட்டனர்.

அந்த வகையில், அருகிலுள்ள காடு வழியாக நடந்து சென்று, பேருந்து நிலையம் செல்லும் நோக்குடன் 19 பேரும் ஜூலை 5 ஆம் தேதி புறப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். மீதமுள்ளவர்கள் வீட்டிற்கு பத்திரமாக சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஃபுராக் ஆற்றில் 16 பேருடைய உடல்கள் மிதப்பதாக ஆடியோ ஒன்று வைரலாகியது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அகமதாபாத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

ABOUT THE AUTHOR

...view details