இது குறித்து மீரட் காவல் கண்காணிப்பாளர் (நகர) வினீத் பட்னாகர், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்ட காவல் துறையினருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து சுமார் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர் கூறியதாவது, "அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் சில அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டன, மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை" என்றார்.
உழவர் மீது காரை செலுத்திய பாஜகவினர்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக லக்கிம்பூரில் உழவர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாநில துணை முதலமைச்சர் அங்கு வரும்போது அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஒன்றிய உள் துறை இணையமைச்சரின் மகன் காரில் அவ்வழியே சென்றார். அப்போது, பாஜகவுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் கோஷமிட, அமைச்சரின் மகனுடன் வந்த பாஜகவினர் உழவர் மீது காரை செலுத்தினர்.
இதையடுத்து, அவர்களின் கார் போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்தில் நான்கு உழவர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் என எட்டு பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்