தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊக்கா பார்லரில் அதிரடி சோதனை- அத்துமீறிய 18 பேர் கைது - 18 பேர் கைது

மகாராஷ்டிராவில் அத்துமீறி ஊக்கா பார்லரை நடத்தி வந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

உக்கா பாரில் போலீசார் அதிரடி சோதனை
உக்கா பாரில் போலீசார் அதிரடி சோதனை

By

Published : Mar 5, 2021, 11:13 AM IST

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் புறநகரான மீரா சாலைப் பகுதியில் அத்துமீறி ஊக்கா பார்லர் நடத்தி வருவதாக காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

இதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்று காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஊக்கா பார்லர் ஒன்றில், கரோனா விதிகளை மீறி அதிக எண்ணிக்கைகளுடன் மது அருந்தி கொண்டும், புகைப் பிடித்து கொண்டும் பலர் காணபட்டனர்.

இதையடுத்து, காவலர்கள் அத்துமீறி பார் நடத்திய உரிமையாளர், மேலாளர் மற்றும் பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் என 18 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது 188 மற்றும் 285 தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம், கவனக் குறைவால் தீ ஏற்படக்கூடிய அபாயம், பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து, காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : மூதாட்டி பாலியல் வன்புணர்வு செய்து கொலை: ஆறுமணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details