இந்தியாவில் வாக்களிக்கத்தகுதியான வயது 18ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு 18 வயது நிரம்பிய பின் மட்டுமே வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இது சில சமயங்களில் விண்ணப்பித்தும் வாக்காளர் அட்டை கிடைக்க தாமதம் ஆவதால் விண்ணப்பித்தவர்களால் உடனே நடக்கக் கூடிய தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை இருந்துவந்தது.
இதனடிப்படையில் முன்பு வாக்களிக்கத்தகுதியான 18 வயது நிரம்பியோர், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். ஆனால் இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18 வயது நிரம்பும் வரை காத்திருக்கத்தேவையில்லை எனவும் கூறியுள்ளது.