ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் நுழைவுத் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நேற்றிரவு (டிசம்பர் 11) நடந்துள்ளது. இதுகுறித்து கோட்டா போலீசார் தரப்பில், மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரணவ் வர்மா (17) என்னும் மாணவன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நீட் நுழைவுத் தேர்வு பயற்சி மையத்தில் தங்கி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு விடுதிக்கு வெளியே உள்ள நடைபாதையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவன் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த விடுதி உரிமையாளர் மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தோம். அதன்பின் மாணவனின் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு எலி மருந்து பொட்டலம் இருந்தது. இருப்பினும், உடற்கூராய்வு முடிவுகளின் பின்பே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மகளின் மெஹந்தி விழாவில் நடனம் ஆடிய தந்தைக்கு மாரடைப்பு