தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாடுகளில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி - latest tamil news

வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்த 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கரோனா உறுதி
வெளிநாடுகளில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Dec 30, 2022, 11:56 AM IST

டெல்லி: உலகம் முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது. அதோடு சீனா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் இந்தியா வரும்போது கரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து டெல்லி வந்தவர்களிடம் நடத்தப்பட்ட ரேண்டம் பரிசோதனையில், இதுவரை 17 பேருக்கு கரோனா பாதிக்கப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர் கௌரி அகர்வால் கூறுகையில், “தற்போது உலக நாடுகள் முழுவதும் புதிய வகை BF.7 வகை கரோனா பரவி வருகிறது.

இதுவரை கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர். இதுவரை 17 பேருக்கு கரோனா பாதிக்கப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இறுதியாக 4 நாள்களுக்கு முன்பு மியான்மரில் இருந்த வந்த 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காசி கோயிலில் லிங்கத்தை தொட்டு வழிபட தடை

ABOUT THE AUTHOR

...view details