புது டெல்லி : மத்திய அரசின் வரவு செலவு திட்ட அறிக்கை மீதான இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் விரேந்திர குமார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “கடந்த 3 ஆண்டுகளில் மனிதக் கழிவுகள் அகற்றம் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்ட 161 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். அந்த அறிக்கைகளின்படி, தற்போது யாரும் கையால் துப்புரவு பணியில் ஈடுபடவில்லை, ஆனால் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டு கணக்கெடுப்புகளில் மொத்தம் 58,098 பேர் இந்தப் பணியில் நேரடியாக ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.