ஹைதராபாத்: பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா நகரில் உள்ள பழைய கிணறு ஒன்றிலிருந்து 2014ஆம் ஆண்டு ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகள் யாருடையவை என்பது குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. இவை இந்தியா-பாகிஸ்தான் பிரியும்போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று மரபணு ஆராய்ச்சியார்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே பஞ்சாப் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் ஷெராவத் இந்த எலும்புக்கூடுகளை வைத்து, ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையம், உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, மரபணு ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.
எலும்புக்கூடு மாதிரிகள், டிஎன்ஏ மற்றும் ஐசோடோப்பு பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் ஆய்வு முடிவுகள் ஃபிரான்டியர்ஸ் இன் ஜெனடிக்ஸ் (Frontiers in Genetics) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா நகரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 160 ஆண்டுகள் பழமையானவை.
இந்த எலும்புக்கூடுகள் கங்கை சமவெளிப் பகுதியில் வசித்தவர்களுடையது. குறிப்பாக 26ஆவது வங்காள காலாட்படை வீரர்களுடையது. இந்த படையில், மேற்குவங்கத்தின் கிழக்குப்பகுதி, ஒடிசா, பிகார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் இருந்தனர்.
இந்த வீரர்கள் 1857ஆம் ஆண்டு, சிப்பாய்க் கலகத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து, பிடிபட்டபோது, தூக்கிலிடப்பட்டனர். இதுபோன்ற அறிவியல் ஆய்வுகள் வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்க உதவுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா என்றால் வர்த்தகம்... செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி...