லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் சாதனா சிங் என்னும் 40 வயது மதிக்கத்தக்க பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அப்பகுதி போலீசாருக்கு ஜூன் 7ஆம் தேதி தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது 16 வயது மகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட சாதனா சிங்கின் கணவர் மேற்கு வங்கத்தில் ராணுவத்தில் இளநிலை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்ததால் அவரை சாதனா சிங் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆந்திரமடைந்த சிறுவன் வீட்டிலிருந்த தனது தந்தையின் லைசன்ஸ்டு கைத்துப்பாக்கியை வைத்து சாதனா சிங்கை சுட்டுக்கொன்றான்.
இந்த சம்பவம் ஜூன் 6ஆம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து தாயின் உடலை ஒரு அறையில் வைத்து விட்டு, மற்றொரு அறையில் தனது தங்கையுடன் சிறுவன் இருந்துள்ளான். அங்கிருந்து துர்நாற்றாம் வீசவே பயந்துபோன சிறுவன் தனது தந்தைக்கு போன் செய்து, தாயை யாரோ சுட்டுக்கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில், சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:வீட்டு உரிமையாளரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்