சிக்கிம்:வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற பகுதிக்கு மூன்று வாகனங்களில் இந்திய ராணுவ வீரர்கள் சென்றுக்கொண்டிருந்தனர். வாகனங்கள் ஜெமாலு பகுதியின் கொண்டை ஊசி வளைவில் ஒரு வாகனம் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sikkim tragedy: விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் பலி - army truck accident
சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிழந்தனர்.
![Sikkim tragedy: விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் பலி அ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17290424-thumbnail-3x2-d.jpg)
அ
விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Last Updated : Dec 23, 2022, 4:06 PM IST