ராஜஸ்தானில் தார் மாவட்டத்தில் உள்ள பலோடி துணை சிறைச்சாலையில், நேற்றிரவு 16 கைதிகள், காவலர்கள் மீது மிளகாய்ப்பொடியை தூவி தப்பியோடியுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகளும், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி விட்டு கைதிகள் தப்பியோட்டம்! - Prisoner absconding in Rajasthan
ஜெய்ப்பூர்: பலோடி துணை சிறைச்சாலையிலிருந்த 16 கைதிகள், காவலர்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவி விட்டு தப்பியோடியுள்ளனர்.
![போலீசார் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி விட்டு கைதிகள் தப்பியோட்டம்! prisoners escaped](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11294394-850-11294394-1617674902882.jpg)
கைதிகள்
காவலர்கள் மீது மிளகாய் பொடியை தூவிய கைதிகள்
இதுகுறித்து பேசிய எஸ்பி. அனில் கயல், " நேற்றிரவு 8.30 மணியளவில், இரவு நேர உணவு முடிந்த பிறகு, சிறையில் அடைக்க காவலர்கள் சென்ற போது, மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டு இந்தக் கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேடுதல் பணியில் காவல் துறையினர் பல குழுக்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாக்காளர்கள் 90, ஆனா பதிவானது 171... அசாம் தேர்தலில் குளறுபடி!