டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி ஆதர்ஷ் குமார் தலைமையிலான அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், யமுனை நதிக்கரையோரம் முறையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்களால், வடிகால்கள் மூலம் நதியில் கழிவுநீர் கலக்கிறது எனவும் இதனால், அதை முறைப்படுத்த தவறிய நீர் வாரியம், பெருநகர மாநகராட்சி ஆணையத்திற்கு அபாரதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், நொய்டா ஆணையத்திற்கு 100 கோடி ரூபாயும், டெல்லி நீர் மேலாண்மை வாரியத்திற்கு 50 கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தொகையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கில் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பால் சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்நலனுக்கு ஏற்பட்ட பாதிப்பை சீராக்க இந்த தொகை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நொய்டாவில் உள்ள கட்டடங்களில் போதுமான எண்ணிக்கையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை என்வும் அப்படி இருந்தாலும், அவை விதிமுறைகளின்படி செயல்படவில்லை என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.