தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ADHD நோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுவனின் படைப்பு.! - மின்சார மிதிவண்டி

ADHD நோயால் பாதிக்கப்பட்டுள்ள 15 வயது கேரள சிறுவன் மின்சார மிதிவண்டி ஒன்றை உறுவாக்கியுள்ளார்.

கேரள சிறுவனின் படைப்பு
கேரள சிறுவனின் படைப்பு

By

Published : Feb 4, 2023, 7:06 AM IST

கோழிக்கோடு: இந்த நவீன காலத்தில் சிறுவர்கள் தங்கள் படைப்புகளை உறுவாக்கி பல சாதனைகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் கோழிக்கோடு கொய்லாண்டியைச் சேர்ந்த ஜி.எஸ்.சயந்த் (வயது 15), என்ற மாணவர் கவனக்குறைவு, அதிக செயல்பாடு கோளாறு (ADHD) நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு மணி நேரம் சார்ஜ் செய்து 90 கிலோ மீட்டர் வரை இயக்கக்கூடிய மின்சார மிதிவண்டியை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து சயந்த் கூறுகையில், “இரண்டாம் வகுப்பில் இருந்து சைக்கிளில் பள்ளிகு செல்வேன். இதனால் களைத்துப் போனேன். அப்போது இருந்து எலெக்ட்ரிக் சைக்கிள் குறித்து நினைத்தேன். தற்போது நான் இந்த சைக்கிளை உறுவாக்கியுள்ளேன். இதில் BLDC மோட்டார், பைக் செயின், பேட்டரி மற்றும் சுவிட்சுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கிலோ மீட்டர் சைக்கிளை இயக்க முடியும்” என்றார்.

மேலுக் அவர் உள்ளூர் மக்களுக்கான வீட்டுக் கருவிகள், நாய் கூண்டுகள், கோழி தங்குமிடங்கள் மற்றும் கத்திகள் போன்ற தயாரிப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிக்கல் - விவரம் உள்ளே!

ABOUT THE AUTHOR

...view details