தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவலர் உடல் தகுதித் தேர்வு: தேர்ச்சிப்பெற்ற 15 திருநங்கைகள் - சத்தீஸ்கர் போலீஸ்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காவலருக்கான உடல் தகுதித் தேர்வில் 15 திருநங்கைகள் தேர்ச்சிப்பெற்று அசத்தியுள்ளனர்.

Chhattisgarh
சத்தீஸ்கர்

By

Published : Mar 1, 2021, 10:52 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் காவல் துறையில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடந்தது. தற்போது, தேர்வு முடிவுகளைக் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், 15 திருநங்கைகள் உடல் தகுதித் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.

இது குறித்து திருநங்கைகள் நலனுக்காக அமைக்கப்பட்ட மிட்வா குழு உறுப்பினர் கூறுகையில், "இதில் வெற்றிபெற்றுத் தேர்வானது அவர்களுக்குப் பெரும் மதிப்பைத் தரும். முன்னுதாரணமாகத் திருநங்கைகள் 15 பேரை தேர்ந்தெடுத்தமைக்காகத் தேர்வு அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்றனர்.

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 15 திருநங்கைகள்

சத்தீஸ்கரில் முதன்முறையாகக் காவல் துறையில் திருநங்கைகள் சேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எரிவாயு விலை உயர்வு எதிரொலி - விமான கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details