தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தகார் மாகாணத்தில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் (ஏ.என்.எஸ்.எஃப்) பதிலடி தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: சுட்டு வீழ்த்தப்பட்ட 15 தாலிபான்கள்! - தலிபான்
காபூல்: ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தகார் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் பதினைந்து தாலிபான் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Taliban terrorists
இந்தத் தாக்குதலில் 15 தாலிபான் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் தாலிபானின் ஆயுதங்கள், வெடிமருந்துகள் அழிக்கப்பட்டன.