தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டே ஆண்டுகளில், 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் - அதிரவைக்கும் அரசின் தகவல்

டெல்லி: 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில், 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு
சைபர் பாதுகாப்பு

By

Published : Mar 23, 2021, 11:52 PM IST

தொழில்நுட்ப உலகில் இணைய சேவை பெரும் பங்கு வகிக்கிறது. அதே சமயத்தில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது இணைய உலகில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில், 15 லட்சத்திற்கும் மேல் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில், "தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 70B-இன் படி, சைபர் பாதுகாப்பு முறைகேடு சம்பவங்களை இந்திய கணினி அவசரகால மீட்பு குழு கண்காணித்துவருகிறது.

அக்குழு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டு, 3 லட்சத்து 94 ஆயிரத்து 499 சைபர் முறைகேடு சம்பவங்களும் 2020ஆம் ஆண்டு 11 லட்சத்து 58 ஆயிரத்து 208 சைபர் முறைகேடு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details