தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேபாள எல்லையில் யுரேனியத்துடன் 15 பேர் கைது - இந்திய நேபாள எல்லையில் கடத்தல்

இந்திய-நேபாள எல்லையில் யுரேனியத்துடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15-arrested-with-2-kg-uranium-near-indo-nepal-border-in-biratnagar
15-arrested-with-2-kg-uranium-near-indo-nepal-border-in-biratnagar

By

Published : Jul 22, 2022, 5:57 PM IST

பாட்னா: இந்திய - நேபாள எல்லையில் உள்ள பிரத்நகரில் சந்தேகத்திற்கிடமாக 15 பேர் விடுதியில் தங்கியிருப்பதாக பிரத்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது உடைமைகளில் அணு மூலப்பொருளான யுரேனியம் 2 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட தனிமமாகும். இந்த யுரேனியத்தை பறிமுதல் செய்த போலீசார், 15 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யுரேனியத்தை பிரத்நகரிலிருந்து பிகார் எல்லை வழியாக இந்தியாவிற்குள் கடத்த முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பிகார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ரஷ்யாவிலிருந்து வந்த யுரேனியம்!

ABOUT THE AUTHOR

...view details