மத்தியப் பிரதேசம்: போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (MANIT) நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் மொத்தம் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 1,484 மாணவர்களின் விடாமுயற்சியே இந்த வெற்றி சாதனைக்கு வழிவகுத்துள்ளது.
விக்யான் பாரதியின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த மயூரி தத் கூறுகையில், "இதற்கு முன்பு இந்த சாதனையை சீனாவில் ஹாங்காங் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போதைய முயற்சியில், இன்று நான்கு வெவ்வேறு வகை ரோபோக்கள் தயாரிக்கப்பட்டன.
முதல் வகை ரோபோ விதைகளை மண்ணில் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இரண்டாவது வகை ரோபோக்கள் ஒரு பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றன. மூன்றாவது வகை ரோபோக்கள் நீர்ப்பாசன செயல்முறைக்குப் பிறகு மண்ணை சமன் செய்வதற்காக உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் நான்காவது வகை ரோபோக்கள் மண்ணைத் தோண்டி எடுக்கின்றன. இந்த முயற்சியில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்" எனக் கூறினார்.