புதுச்சேரியில் ஆளுங்கட்சிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. அதன்படி, வரும் 8 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானும் காங்கிரஸ் கட்சியின் தொண்டன் என்கிற முறையில் அந்த போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக முதலமைச்சர் நாராயணசாமியும் கூறியிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ள தடையாணையில், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.