தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூவினர் 140 பேர் கைது - சிஐடியூ

புதுச்சேரியில் பணியை விட்டு நீக்கப்பட்ட தொழிலாளர்களை, மீண்டும் பணியமர்த்த கோரி, சிஐடியூ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

140 பேர் கைது
140 பேர் கைது

By

Published : Jul 29, 2021, 3:55 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சேதுராப்பட்டியில் பிரபல ஷூ தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு தயாரிக்கப்படும் ஷூக்கள் வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 120 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு பணிபுரிந்த 15 ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சக ஊழியர்கள் 89 பேர், நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்தனர்.

காவல்துறையினருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு

இதனைத் தொடர்ந்து சுமார் 100 நாட்களாக 89 தொழிலாளர்களையும், தொழிற்சாலை நிர்வாகம் பணிபுரிய அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இன்று (ஜூலை 29) சிஐடியு மாநில தலைவர் முருகன் தலைமையில் சேதுராப்பட்டி மும்முனை சந்திப்பிலிருந்து, தொழிற்சாலையை நோக்கி சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொடியினை ஏந்தி பேரணியாக வந்தனர்.

சிஐடியூ தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

பின்னர் கோரிமேடு ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவலர்கள், தடுப்புகளை அமைத்து பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தடுப்புகளை தூக்கி வீசி, காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி - மயிலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட, 140 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுங்க - புதுச்சேரி அதிமுக

ABOUT THE AUTHOR

...view details