ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை, அவரது உறவினரே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமான நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 26 வார கால கருவை கலைக்க அனுமதி வழங்கும்படி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மருத்துவ ஆய்வுக்குள்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 14 வயது சிறுமி தாக்கல்செய்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.