பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தநாள் தினத்தன்று 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், நேற்று(பிப்.20) சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்ப பேருந்தில் ஏறினார்.
இந்த பேருந்திலிருந்த நான்கு பேர் சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று விரும்பிய உணவு பண்டங்களை வாங்கிகொடுத்தனர். இதையடுத்து சிறுமியை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துசென்று கூட்டுபாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர்.