பிரேசில் நாட்டின் அமேசோனா-1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பிஎஸ்எல்வி ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இஸ்ரோ தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்த தயாராகவுள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் 14 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த இலக்கை அடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றிவருகின்றனர்.