அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல் நேற்று (மே.18) மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கரையைக் கடந்து சென்றது.
இந்தப் புயல் தாக்கம் காரணமாக மும்பை கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்த ’P 305’ என்ற கப்பல், புயலில் சிக்கி கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் இருந்த 273 பேரில் 184 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டனர்.
14 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதம் உள்ளவர்களைத் தேடும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியில் ஓ.என்.ஜி.சி., எஸ்.சி.ஐ., இந்திய கப்பல் படையின் ஐஎன்எஸ் தல்வார் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
டவ்-தே புயல் காரணமாக மும்பையில் ஒரே நாளில் 230 மி.மீ மழை பொழிந்துள்ளது. 2,364 மரங்கள், 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், புயல் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகரட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:"தன்னம்பிக்கை" மந்திரத்துடன் கரோனாவை எதிர்கொண்டு மீண்டு வந்த 100 வயது பாட்டி!