மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. துப்புல் ரயில் நிலையம் அருகே அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் மாநில மீட்புப் படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த ராணுவ மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி, 13 பேர் காயம் - மேலும் பலர் மாயம்!
கனமழை காரணமாக துப்புல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
Tupil
மேலும் பலர் மண் சரிவில் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் சோகம்- ஆட்டோ மீது மின்கம்பி விழுந்ததில் 5 பேர் உடல் கருகி பலி