உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள கொள்கலன் இன்று(ஏப்.4) வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடி விபத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கி படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.