பீகாரின் நவாடா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 67 சிறுவர்கள் உட்பட 127 பேரை மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளது. அவர்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்ததால், தனி பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக,பாலியல் புகார் தொடர்பான விசாரணையில், அங்கிருந்தவர்கள் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுப்பதும், குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை வாங்குவதும் உறுதியானது.
பீகாரில் கொத்தடிமை: 67 சிறுவர்கள் உட்பட 127 பேர் மீட்பு - செங்கல் சூளை
அலிகார்: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 67 சிறுவர்கள் உட்பட 127 பேரை, மாவட்ட நிர்வாகம் மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
![பீகாரில் கொத்தடிமை: 67 சிறுவர்கள் உட்பட 127 பேர் மீட்பு UP brick kiln](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11323233-454-11323233-1617855698333.jpg)
பிகார்
இதனையடுத்து செங்கல் சூளையின் உரிமையாளர்கள் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தினந்தோறும் 2 ஆயிரம் செங்கல்களை தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிகாரில் பல இடங்களில் கொத்தடிமைகளாக இருந்த நபர்கள், மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நள்ளிரவில் சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 4 வீரர்கள் படுகாயம்!