டெல்லி:இந்தியா முழுவதும் இந்தாண்டு மட்டும் 126 புலிகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்பட்டியலின்படி, 2021ஆம் ஆண்டில் புலிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 42 புலிகள் உயிரிழந்துள்ளன.
இந்த மாநிலத்தில் மொத்தமாக 526 புலிகள் உள்ளன. இதையடுத்து மகாராஷ்டிராவில் 26 புலிகள் உயிரிழந்துள்ளன. மூன்றாவதாக கர்நாடகாவில் 14 புலிகள் உயிரிழந்துள்ளன. தமிழ்நாட்டில் 4 புலிகள் உயிரிழந்துள்ளன. அப்படி நாடு முழுவதும் மொத்தமாக 126 புலிகள் உயிரிழந்துள்ளன.
காரணம் என்ன?
இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தரப்பில், புலிகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலன புலிகள் உடல்நலக்கோளாறு, விஷம் வைத்தல், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கின்றன. இந்தக் காரணங்களில் உடல்நலக்கோறுகளை தவிர மற்ற காரணிகள் புலிகள் காப்பகங்களுக்கு வெளியே நடைபெறுகிறது.
இதனால் புலிகளை காப்பதில் பின்னவை ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 70 விழுக்காடு புலிகள் இந்தியாவில் உள்ளன. இதனால், புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதிலும், பாதுகாப்பதிலும் இந்தியாவிற்கு முக்கியப் பங்கு உள்ளது. 2018ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 2,967க்கும் அதிகமான புலிகள் உள்ளன. மொத்தமாக 18 மாநிலங்களில் 51 புலிகள் காப்பகங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க:ராயல் வங்கப் புலி சுந்தரவனக் காட்டில் விடுவிப்பு