தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீகார் மாநிலம் கந்தக் ஆற்றில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்ட குட்டி முதலைகள்! - கரியல் வகை முதலைகள்

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மற்றும் பீகார் மாநிலத்தின் 8 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் இருந்து பெறப்பட்ட முதலைகளின் முட்டைகள், விவசாயிகளின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவை பீகார் மாநிலத்திலுள்ள கந்தக் ஆற்றில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.

125-gharial-babies-safely-released-into-gandak-river-in-bihar-bagaha
பீகார் மாநிலம் கந்தக் ஆற்றில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்ட குட்டி முதலைகள்!

By

Published : Jun 18, 2023, 10:40 AM IST

பகாஹா(பீகார்): உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மற்றும் பீகார் மாநிலத்தின் 8 இடங்களில் இருந்து பெறப்பட்ட முட்டைகள் குஞ்சு பொறித்த நிலையில், அதில் இருந்து வெளியான 125 முதலைக் குட்டிகள், வால்மீகி புலிகள் காப்பக பகுதியின் அருகே அமைந்துள்ள கந்தக் ஆற்றில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.

வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை, இந்தியாவில் உள்ள உலக வனவிலங்குகள் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மிருகக்காட்சி சாலை உள்ளிட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில், இந்த முட்டைகள், கந்தக் ஆற்றின் அருகே, பாதுகாப்பாக குஞ்சு பொறித்து உள்ளன.

இதுகுறித்து, உலக வனவிலங்குகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி சுப்ரதா கே பெஹரா கூறியதாவது, உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மற்றும் பீகார் மாநிலத்தின் 8 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் இருந்து பெறப்பட்ட முட்டைகள், விவசாயிகளின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டு வந்தன.

பின்னர், இந்த முட்டைகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் குஞ்சு பொறிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் இருந்து 125 குட்டி முதலைகள் வெளிவந்தன. இந்த குட்டி முதலைகளை, வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பேருதவியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, வனவிலங்குகள் அமைப்பு மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அதிகாரிகள், முதலைகள் பாதுகாப்பு மற்றும் அதுகுறித்த ஊக்குவிப்பு நிகழ்வுகளில் மிகுந்த விழிப்புணர்வு உடன் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், முட்டைகள் சேகரிக்கப்பட்டு, குஞ்சுகள் பொறிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த முறை தான், 125 என்ற அளவில், குட்டி முதலைகள் வெளிவந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முதலைகள், அழிந்து போன டைனோசர் இனத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த வகை முதலைகள், தற்போது, அழிவின் விளிம்பில் உள்ளன. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில், கந்தக் ஆற்றின் பகுதியில், இந்த வகை முதலைகள், அதிகளவில் காணப்படுவது, இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களிடையே, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

2016ஆம் ஆண்டில் இந்திய வகை கரியல் முதலைகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், கந்தக் நதி பகுதியில், ஒரு டஜன் என்ற அளவிலேயே, கரியல் வகை முதலைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500 என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளது. முதலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான, அதிகாரிகளை கவுரவிக்கும் வண்ணம், அரசாங்கம், அவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்து உள்ளது.

இந்தியாவில், சம்பல் நதிப்பகுதியை அடுத்து, கந்தக் ஆற்று பகுதியில் தான், இத்தகைய வகை முதலைகள் அதிக அளவில் காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி.. உடைந்த சைக்கிளை வைத்து விவசாயம் செய்யும் தன்னம்பிக்கை விவசாயி..

ABOUT THE AUTHOR

...view details