தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பல்கலைக்கழகத்தில் 122 மாணவர்களுக்கு கரோனா - ஒமைக்ரான் அறிகுறிகளும் தென்படுவதாக மருத்துவர்கள் தகவல் - ஒமைக்ரான் அறிகுறிகளும் தென்படுவதாக மருத்துவர்கள் தகவல்

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 122 மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழகம் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

Patiala
Patiala

By

Published : May 5, 2022, 10:31 PM IST

பஞ்சாப்:நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நான்காம் அலை ஏற்படுவதாக மக்கள் அஞ்சுகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 122 மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி பல்கலைக்கழகத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அறிகுறிகள் உள்ள மாணவர்களை பரிசோதித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழகத்தை நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர். மேலும், விடுதியில் உள்ள மாணவர்களை காலி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதற்கான லேசான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகாரில் 3,000 கி.மீ., பாத யாத்திரை- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details