தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

1000 பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி - மத்திய இணையமைச்சர் ரேணுகா சிங் - ஆஸ்ரம் பள்ளி திட்டம்

டெல்லி: பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக 1,205 பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி அளித்துள்ளது என மத்திய பழங்குடியினர் நலத் துறை இணையமைச்சர் ரேணுகா சிங் சருதா தெரிவித்துள்ளார்.

ரேணுகா சிங்
ரேணுகா சிங்

By

Published : Mar 16, 2021, 6:35 PM IST

ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் பள்ளி, ஆஸ்ரம் பள்ளி என பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு இரண்டு திட்டங்களை மேற்கொண்டுவருவதாக மத்திய பழங்குடியினர் நல இணையமைச்சர் ரேணுகா சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆஸ்ரம் பள்ளி திட்டத்தின் மூலம் கட்டுமான பணிகளுக்கான தொகையை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் பழங்குடியின மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த 1,205 பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, மாணவர் ஒருவருக்கு செலவிடும் தொகை 42,000 லிருந்து 61,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2019-20ஆம் ஆண்டு, அத்தொகை 1,09,000ஆக உயர்த்தப்பட்டது.

கூடுதல் வகுப்புகள், சிறப்புப் பயிற்சி, கல்விச் சுற்றுலா, சிறப்பு முகாம்கள், விளையாட்டு முகாம்கள் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பான தரமான கல்வியைப் பெற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மாநில அளவில் செயல்படுத்தும் திட்டம் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி ஆணையம் மூலம் கண்காணிக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details