தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் 1200 பழமையான துர்கா தேவி சிலை கண்டெடுப்பு - துர்கா தேவி சிலை கண்டெடுப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1200 ஆண்டுகள் பழமையான துர்கா தேவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Goddess Durga
Goddess Durga

By

Published : Sep 1, 2021, 4:49 PM IST

புட்காம் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் ஓடும் ஜீலம் நதிக்கரையில் உள்ள கான்சாகிப் பகுதியில் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

அப்போது மணலுக்குள் புதைந்து கிடந்த சிலை ஒன்றை கண்டெடுத்தனர். சிங்கத்தின் மீது துர்கா தேவி அமர்ந்திருக்கும் அந்தச் சிலை கி.பி. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை 12 அடி நீளமும், 8 அடி அகலும் கொண்டது. தற்போது இந்தச் சிலை புட்கம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 1200 பழமையான துர்கா தேவி சிலை கண்டெடுப்பு

தற்போது சிலையானது முறைப்படி தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொல்லியல் துறை இணை இயக்குனர் முஹ்தாக் அஹமது பெய்க் பெற்றுக்கொண்டார்.

அப்போது புட்காம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தாகிர் சலீம் கான் உடனிருந்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு ஆலயம் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details