திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வெங்கனூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சிவனாபராயணன் (12), ஏழாம் வகுப்பு படித்துவந்தான். இவன் சமூக வலைதளங்களில் 'பையர் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்' காணொலி ஒன்றைப் பார்த்ததும், அதனை முயற்சிக்க முடிவுசெய்துள்ளார். அதன்படி, தலைமுடியில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நெருப்பிட்டு ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்கில் ஈடுபட்டுள்ளான்.
அனுபவம் இல்லாமல் முயற்சி செய்ததால், தலையில் அதிகளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாகச் சிறுவனை, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.