தமிழ்நாடு

tamil nadu

பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்பியாக நியமனம்!

By

Published : Jul 6, 2022, 9:40 PM IST

Updated : Jul 6, 2022, 10:02 PM IST

தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பி.டி.உஷா உள்ளிட்ட 12 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமனம்!
பி.டி.உஷா உள்ளிட்ட 12 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமனம்!

புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா, சமூக ஆர்வலரான வீரேந்திர ஹெக்டே மற்றும் இயக்குனர் ராஜமவுலியின் தந்தையும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோர் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பி.டி.உஷா ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் எங்கும் பரவி காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

வீரேந்திர ஹெக்டே மாநிலங்களவை எம்பியாக நியமனம்

மேலும், “வீரேந்திர ஹெக்டே சமூக சேவையில் முன்னணியில் உள்ளார். தர்மஸ்தலா கோவிலில் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பும், சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் அவர் செய்து வரும் மகத்தான பணிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவர் நிச்சயமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேம்படுத்துவார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “வி.விஜயேந்திர பிரசாத் பல தசாப்தங்களாக படைப்பு உலகத்துடன் தொடர்புடையவர். அவரது படைப்புகள் இந்தியாவின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன மற்றும் உலகளவில் தனி முத்திரை பதித்துள்ளன. மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துகள்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாநிலங்களவை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்!

Last Updated : Jul 6, 2022, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details