லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் ஓடும் சராயு ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் ஆற்றில் சிக்கிய பரிதாபம்... மீட்புப் பணி தீவிரம்! - சாரியு நதியில் மூழ்கிய 12 பேர்
உத்தரப் பிரதேசத்தின் சராயு ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரினை மீட்கும் பணி தீவிரம்
இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் பிஏசி டைவர்ஸை களமிறக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்
கிடைத்த தகவலின்படி, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இருவர், நீரோட்டம் திடீரென அதிகரித்ததால் மூழ்க தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்த குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காப்பாற்ற முயற்சிக்கையில் நீரில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.