ஜெய்பூர்:நேபாள தூதரகத்தின் தகவலின் பேரில் ஜெய்ப்பூரில் இருந்து எத்தியோப்பியா செல்ல இருந்த 12 நேபாள சிறுமிகளை ஜெய்ப்பூர் விமான நிலைய ஆணையத்தின் உதவியுடன் ஜெய்ப்பூர் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிறுமிகளுக்கு நேபாள அரசு NOC (No Objection Certificate) வழங்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிபி ராஜீவ் பச்சார் கூறுகையில், ‘நேபாள தூதரகம் மூலம் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் 12 நேபாள சிறுமிகள் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சிறுமிகளின் ஆவணங்கள் சரிபார்த்தோம்.