காத்மண்டு :நேபாளத்தின், நேபாள்கஞ்ச் அடுத்த பன்கே பகுதியில் இருந்து காத்மண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது. ரப்தி நதி நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்துக் பேருந்தில் பயணித்த 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்த 12 பேரில் 8 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் இருவர் இந்தியர்கள் என தெரியவந்ததாக மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர். பீகார் மாநிலம் மலாஹி பகுதியை சேர்ந்த யோகேந்திர ராம் (வயது 67) மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே (வயது 31) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.