தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வைஷ்ணவி தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

புத்தாண்டை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் குவிந்த பக்தர்களில், 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

Vaishno Devi shrine in Jammu and Kashmir
Vaishno Devi shrine in Jammu and Kashmir

By

Published : Jan 1, 2022, 7:45 AM IST

Updated : Jan 1, 2022, 8:38 AM IST

ஸ்ரீநகர்: புத்தாண்டை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் நேற்றிரவு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இந்த தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி, 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை தரப்பில், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாதா வைஷ்ணவி தேவி கோயில் தரிசனத்தின்போது, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.

அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தேன். தேவையான உதவிகளை வழங்க அறிவுறுத்தினேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் முதல் நாடு

Last Updated : Jan 1, 2022, 8:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details