டெல்லியில் ஜனவரி 24ஆம் தேதி, 8 வயது சிறுமி இரண்டு சிறுவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த மே 18ஆம் தேதி 13 வயது சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். டெல்லியில் இதுபோன்ற ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் குறித்து டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.
அதன்படி, "2022ஆம் ஆண்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதி வரை, ஆயிரத்து 100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 33 ஆக இருந்தது. இந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் 6 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை, பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பாக 2 ஆயிரத்து 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள.