மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி அனுப்பியுள்ளார்.
11 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு... 11 பேர் கைது... - nagpur 11 year old girl rape
மகாராஷ்டிராவில் 11 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் ஜூலை 24ஆம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து, நேற்று (ஜூலை 27) மறுபடியும் சிறுமியை அழைத்து தனது நண்பர்கள் 9 பேருடன் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே இளைஞர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாலியல் ரீதியாக பரவுமா குரங்கு அம்மை நோய்...? உலக சுகாதார அமைப்பின் விளக்கம்...