தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா மூத்த எம்எல்ஏ காலமானார்! - மகாராஷ்டிரா மூத்த எம்எல்ஏ

மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலத்தில் அதிக நாள்கள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய மூத்த எம்எல்ஏ கண்பத்ராவ் தேவ்முக் (Ganpatrao Deshmukh) காலமானார்.

Ganpatrao Deshmukh
Ganpatrao Deshmukh

By

Published : Jul 31, 2021, 12:40 PM IST

புனே : விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியைச் சேர்ந்த கண்பத்ராவ் தேவ்முக் (Ganpatrao Deshmukh) உயிர் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரிந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், விவசாயிகள், தொழிலாளர் கட்சியின் மூத்தத் தலைவருமான கண்பத்ராவ் தேஷ்முக் வெள்ளிக்கிழமை மாலை சோலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

முன்னாள் மாநில அமைச்சரான தேஷ்முக் (94) முதுமை தொடர்பான பிரச்சினைகளுக்காக கடந்த 15 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண்பத்ராவ் தேவ்முக் 1962 முதல் மாநில சட்டப்பேரவையில் சோலாப்பூர் மாவட்டத்தில் சங்கோலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்.

இவர், 1962 முதல் 11 முறை எம்எல்ஏவாக பணியாற்றினார். அவரது இறுதி சடங்குகள் சங்கோலாவில் இன்று நடைபெறுகின்றன.

கண்பத்ராவ் தேவ்முக் மறைவிற்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : காலமானார் மக்கள் மருத்துவர்!

ABOUT THE AUTHOR

...view details