ராய்ப்பூர் (சட்டீஸ்கர்): சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் காம்ட்ராயில், வீர் சிவாஜி நகர் பொது மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மோகன் சிங் ராஜ்புர் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மோகன் உள்பட சில மாணவர்கள் 10 ஆம் வகுப்பு கணித துணைத்தேர்வை எழுதுவதற்காக காஷிராம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுள்ளனர்.
தேர்வை முடித்துவிட்டு திரும்பும்போது, 11 ஆம் வகுப்பு மாணவர்களுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவர் மோகன், அருகில் உள்ள மெகஹரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.