சண்டிகர்: பஞ்சாப் தலைமைச் செயலகத்தில், அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின் கட்டணக் குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தன் முடிவில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களை சந்தித்தார்.
அரசு ஊழியர்களுக்கு 11 விழுக்காடு ஊதிய உயர்வு - அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
மாநில அரசு ஊழியர்களுக்கு 11 விழுக்காடு அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

11 percent pay rise for government employees
அப்போது அவர், வீட்டு உபயோக மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு யூனிட் மின்சாரம் 1.19 ரூபாயாக நிர்ணயிக்கப்படும். முன்னதாக ஒரு யூனிட் மின்சாரம் 4.19 ரூபாயாக இருந்தது. அதேபோல மாநில அரசு ஊழியர்களுக்கு, 11 விழுக்காடு அகவிலைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு