தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2020ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 11% அதிகரிப்பு

தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இதனையடுத்து , மாவட்டந்தோறும் சைபர் குற்றங்கள் தடுப்புச் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த மாநிலங்களுக்கு உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 11 விழுக்காடு அதிகரிப்பு
2020ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 11 விழுக்காடு அதிகரிப்பு

By

Published : Feb 11, 2022, 11:37 AM IST

டெல்லி: தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தகலவின்படி 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

மத்திய உள் துறை அமைச்சகம், உள் துறை குழுவிடம் அளித்துள்ள அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 21 ஆயிரத்து 796 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதன் எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து 2020ஆம் ஆண்டில் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய குற்றப்பதிவு ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 735 சைபர் குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 11.8 விழுக்காடாக உயர்ந்து, 2020ஆம் ஆண்டில் 50 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் அதிகப்படியாகப் பதிவானது மோசடி குற்ற வழக்குகள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது (30 ஆயிரத்து 142). இதனையடுத்து பாலியல் ரீதியான குற்றங்கள் (மூன்றாயிரத்து 293), மிரட்டல் வழக்குகள் (இரண்டாயிரத்து 440) ஆகியவை அதிகப்படியாகப் பதிவாகியுள்ளது.

சைபர் குற்றவாளிகள் புதிய யுக்திகளைக் கையாண்டுவருவதால் சைபர் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உள் துறை குழுவினர் கவலை அடைந்துள்ளனர். மேலும், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் ஒரு சைபர் தடுப்புப் பிரிவு கூட இல்லையென்பதும், ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சில சைபர் குற்றத் தடுப்புப் பிரிவுகள் மட்டுமே உள்ளன என்பது குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்தக் குழு மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு, அனைத்து மாநிலங்களிலும் மாவட்டந்தோறும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு உருவாக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களைக் கண்காணிக்கவும், இணையத்தில் குற்றச்செயல் புரிவோரை கண்காணிக்கவும் தனியாக அமைக்கப்பட்டுள்ள பிரிவை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 10), ஆனந்த் சர்மா தலைமையிலான உள் துறைக்கான நிலைக்குழு, காவல் துறை - பயிற்சி, நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

இதையும் படிங்க: 'அல்லாஹூ அக்பர்' கூறிய மாணவிக்கு பரிசுத்தொகை: வலதுசாரி இயக்கம் புகார்

ABOUT THE AUTHOR

...view details